அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு..!

0

புதிய அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டிற்கும் மேலாக அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த 500 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்தும் முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல் படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக அரிசியை விற்பனை செய்த 25 ற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.