வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிப பெண் மீட்பு..!

0

வவுனியா – வைரவ புளியங்குளம் குளக்கட்டு வீதி பகுதியில் இன்று, வயோதிப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

75 வயதான பொன்னம்பலம் செல்லம்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண், சகோதரனின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வயோதிப பெண்ணின் தற்கொலை தொடர்பில் காரணம் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.