தமிழகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு; பொலிசார் மேற்கொண்ட அதிரடி..!

0

கோவை மாவட்டம், சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 26ம் தேதி காதலனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 6பேர் கொண்ட மர்ம கும்பல் காதலனை தாக்கி விட்டு மாணவியை தனியாக தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே வழக்குப் பதிவு செய்த பொலிசார் மாணவியை பலாத்காரம் செய்த மணிகண்டன் (27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனைத்து மகளிர் போலீசார் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரணுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில் பொலிஸ் கமிஷ்னர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நகல் 3 பேர் அடைக்கப்பட்டு உள்ள கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரிக்கும் நிலையில் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கிடைத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.