தமிழருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய அதி உச்ச கெளரவம்..!

0

அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக கணனி விஞ்ஞானியும் அரிசோனா பல்கலைக் கழகத்தின் பிரதித் தலைவருமான சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,

அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக வானியல் விஞ்ஞானியான France Córdova கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

எனினும் அவரது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக பஞ்சாநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.