பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு வடகிழக்கிற்கு வெளியேயும் போட்டி..!

0

எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்யை தினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா சென்றுள்ள நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமது தனிப்பட்ட கட்சி நலன் காரணமாகவே தமிழரசுக் கட்சி இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழருக்கான கூட்டணியைப் பலப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.