வௌ்ளத்தில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கும், நடத்துனருக்கும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

0

பொலனறுவை – மனம்பிட்டிய, கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் பொலனறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்

கவனயீனமாக வாகனம் செலுத்தியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளால் பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த பஸ் பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய கல்லேல்ல பகுதியில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் 54 பயணிகள் பயணித்துள்ளனர்.

மாதுறு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் சிறுபிள்ளைகளும் கர்ப்பிணி பெண்களும் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.