தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனியும் அமைச்சர்..!

0

தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாததையிட்டு வெட்கமடைகிறேன் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கவலை வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை தேசிய மொழிகள் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் இரண்டே மொழிகள்தான் அதிகளவு பேசப்படுகின்றன. அதில் சிங்கள மொழியை அதிகமாக பேசுகின்றோம். ஆனால் தமிழ் மொழியை நாங்கள் இதுவரை கற்றுக் கொள்ளாதிருப்பது வெட்கத்திற்குரிய விடயம்” என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

மொட்டில் உள்ள அரசியல்வாதிகளில் மக்களுடனும், இளைஞர்களுடனும் சகஜமாகப் பழகக் கூடிய ஒரு அமைச்சர் என்றால் அது டளஸ் அழகப் பெரும மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.