நகர அலங்கார நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரச விருது..!

0

சுயமாக முன்வந்து நகரங்களை அழகுபடுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலத்திற்கு ஏற்ற வகைகளில் மக்கள் விரும்பும் சித்திரங்களை இந்த இளைஞர் யுவதிகள் வரைந்துள்ளதை தாம் காணக் கூடியதாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்த பிரதமர் இவர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை விரைவாக மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.