வவுனியா உட்பட பல இடங்களில் நாளை வரை 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி..!

0

நாட்டின் பல பிரதேசங்களில் 150 தொடக்கம் 200 மில்லி மீற்றர் வரையில் கடும் மழையை எதிர்பார்க்க முடியும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காலநிலை (23) நாளை 7.00 மணி வரையில் நீடிக்கும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை தொடர்பான விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலிய, மாத்தளை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாக கூடும்.