சிறையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க; அடுத்த விக்கெட் ஹிருணிகா…!

0

ஐக்கிய ​தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேம சந்திரவை கைது செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெமட்ட கொடவில் இடம் பெற்ற விபத்து மற்றும் இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இச் சம்பவங்களுக்கும் தற்போதய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுடன் கடந்த நல்லாடசி அரசின் காலத்தில் விட்ட தவறுகளுக்கே பாதிக்கப் பட்டவர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகிந்த தரப்பு பிரபல அசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.