மண் அகழ்வை தடுத்த அருட்தந்தை மீது பொலிசார் தாக்குதல்..! (வீடியோ)

0

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளுர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென்பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளப்புக்கென கையில் வைத்திருப்பதாக தெரிவித்து பொலிசாரின் துணையுடன் மணல் அகழ்வு செய்து வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொது மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது மணல் அகழ்வு செய்து அவைகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இச் சம்பவம் நீண்ட நாட்களாக இடம் பெற்று வருகின்றன.

பொலிசாரின் பாதுகாப்புடன் சட்டவிரோத மண் அழ்வில் ஈடுபட்டவர்களை ஊர் மக்களுடன் இணைந்து தடுத்த கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டனர்.

மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளை மன்னார் பொலிஸ் ஊக்குவிக்கின்றதா? அருட்தந்தை மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் மீதும், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை பகிர்வோம், அழுத்தத்தை வழங்குவோம்.

மன்னார் செய்தியாளர்