சம்பந்தரின் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; திடீர் அறிவிப்பின் சூட்சுமம் இதுதான்..!

0

அடுத்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இடம் பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

இதன் போது இரா.சம்பந்தன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படித்த இளையோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இக் கூற்றின் ஊடாக சம்பந்தர் தன்னை ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொண்டு தனது 84வது தள்ளாடும் வயதில் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்ற கதிரையை சூடேற்ற எண்ணியுள்ளார்.

உண்மையில் தான் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து தனது தள்ளாடும் வயதிலும் பின் கதவாலாவது பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்றே எண்ணுகின்றார்,

உண்மையில் இளைஞர்களுக்கு வழிவிடுவதாக இருந்தால் தேசியப் பட்டியலூடாகவும் தான் வரமாட்டேன், அச் சந்தர்ப்பங்களையும் இளைஞர்களுக்கே வழங்குகிறேன் என்று ஊடகங்களில் முடிந்தால் கூறட்டும்.

அல்லது இந்தக் கதையும் தீபாவளிக்கு தீர்வு என்பது போலத்தான் அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– பகதன்