இலங்கையின் சுவர்களை வர்ண மயமாக்குதல் எனும் தொனிப் பொருளின் இன் கீழ் மாவட்டம் தோறும் இளைஞர்கள் களத்தில் இறங்கியிருப்பது நாம் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று மாலை 5 மணியளவில் மன்னார் நகரை அழகுபடுத்தும் நிகழ்வை ஆரம்பித்துள்ளனர்.
இங்கு இலங்கையில் வாழ்கின்ற சமயங்களை பிரதிபலிக்கும் படங்களும் மற்றும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்களும் வரைய இருப்பதனால் இதில் பங்கு பற்ற விரும்பும் இளைஞர் யுவதிகளை நாளை காலை 8 மணிக்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்று கூடி தங்களது பங்களிப்பினையும், ஆதரவையும் வாழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
(மன்னார் செய்தியாளர் விஜயகுமார்)