ஐந்து புருஷன் வேண்டும்; இல்லை என்றால் திருமணம் வேண்டாம் – நடிகை ரித்திகா

0

2016ம் ஆண்டு வெளிவந்து சிறந்த படத்திற்கான சிறப்பு நடுவர் விருது என்ற தேசிய விருதை வாங்கிய படம் ‘இறுதிச் சுற்று’. அந்தப் படத்தில் நிஜ பாக்சரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவருக்கும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறப்பு நடுவர் தேசிய விருதும் வழங்கப்பட்டது. அப்படத்திற்குப் பிறகு தமிழில் ‘ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா’ ஆகிய படங்களில் மட்டும் நடித்தார்.

அவை இரண்டுமே சரியாகப் போகவில்லை. இரண்டு வருடங்களாக ரித்திகா தமிழ் சினிமா பக்கம் வரவேயில்லை. அந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்.

இந்த வருடம் ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடிய போது கூறிய விஷயம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது .

இவர் லைவ்வில் ரசிகர்களுடன் பேசும் போது ஒரு ரசிகர், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..? எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ரித்திகா, தான் ஐந்து பேரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. இப்போது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன். நான் குறைந்த பட்சம் ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்வேன். உங்களை நேரில் பார்க்கும் போது நிச்சயம் உங்களையும் திருமணம் செய்து கொள்கிறேன்.

நான் விளையாட்டாக சொல்கிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். உண்மையாகத் தான் சொல்கிறேன். நிச்சயம், நான் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இல்லை என்றால் என் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் எனப் பேசியுள்ளார். பெண் உரிமை என்ற போர்வையில் ரித்திகா சிங்கின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் முகம் சுழிக்க வைத்துள்ளது.