தேரரின் அதிரடியால் பறிபோகவுள்ள ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகம்..!

0

மட்டக்களப்பு தனியார் பல்கலை கழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கபடாமை குறித்து வினவுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் நேற்று பொலிஸ் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு சென்றிருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதற்கு கிடைக்க பெற்ற நிதி மற்றும் அதனை செலவிட்ட விதங்களில் முரண்பாடு காணப்படுவதாக தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அது குறித்து விசாரணைகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடாத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இன் நடவடிக்கைகளால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகம் பறிமுதல் செய்யப்படுவதை யாரும் தடுக்க முடியாது என கூறப்படுகிறது.