TU-22m3 ரக ர‌ஷ்ய போர் விமானம் தரையில் விழுந்து விபத்து..!

0

ர‌ஷ்ய போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் சாதுரியமாகச் செயற்பட்டு விமானத்திலிருந்து குதித்ததால் அதிஷ்ர வசமாக உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தவலை வெளியிட்டுள்ளது.

ர‌ஷ்யாவின் போர் விமானமான ‘TU-22m3’ ரக விமானம் நீண்ட தூரம் சென்று குண்டு வீசும் திறன் படைத்தது. 

இந்த நிலையில் ர‌ஷ்யாவின் தெற்கு பகுதியிலுள்ள அஸ்டிரகான் பிராந்தியத்திலிருந்து ‘TU-22m3’ ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் இரு என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனால் விமானிகள் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி வேகமாகச் சென்றது.

அதனைத் தொடர்ந்து, விமானம் தரையை நெருங்கிய போது விமானிகள் இருவரும் அருகில் உள்ள ஒரு வயலில் குதித்தனர். அதன் பின்னர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் சாதுரியமாகச் செயற்பட்டு விமானத்தி லிருந்து குதித்ததால் அதிஷ்ர வசமாக உயிர் தப்பினர்.