மருதங்கேணிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு..!

0

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு தொகுதி உதவிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவியானது வணக்கத்துக்குரிய இமானுவேல் இரவிச்சந்திரன், சிவஸ்ரீ சபாரட்ணசர்மா, வாசுதேவசர்மா, பேராசிரியர் V.P.சிவநாதன், ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன், சட்டத்தரணி திருமதி.சு.சிவரூபவதி, கட்டடக் கலைஞர் த.சிற்பரன் மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் திரு.க.இராஜதுரை ஆகியோரின் அங்கத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட “தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நிதியத்தின் முதலாவது திட்ட நிகழ்வாக மருதங்கேணிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் இன்று செவ்வாய்க் கிழமை (17.12.2019) வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வடமராட்சி மருதங்கேணிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்விற்கான நிதி அனுசரரணையை இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.