இருளில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்…!

0

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இருளின் மத்தியில் நடைபெற்றுள்ளது.

இன்றைய கூட்டம் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றுள்ளது. இவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினராவார்.

இக் கூட்டமானது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தானால் சில நிமிடங்கள் தாமதமாகி ஆரம்பமாகியது.

வவுனியாவில் மின்சார திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருத்த வேலைகள் சனி, ஞாயிறு, திங்கள் வரை என அறிவித்திருந்தது. அத்துடன் இன்று செவ்வாய் கிழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்ததாக தெரிய வருகிறது.