வவுனியா நகரசபை தலைவர் கெளதமனால் சனசமூக நிலையம் திறப்பு..!

0

வவுனியா நகரசபைக்கு உட்பட்ட சின்னப் புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறப்பு விழாவானது நேற்றைய தினம்(16) சனசமூக நிலையத்தின் தலைவர் பூலோகசிங்கம் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உபநகரபிதா சு.குமாரசாமி, செயலாளர் இ.தயாபரன், நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், த.பரதலிங்கம், சமந்தா, புஞ்சிகுமாரி, மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.