ஜனாதிபதியின் போலி இணைப்புச் செயலாளர்; தகவல்களை கோரும் பாதுகாப்பு அமைச்சு

0

ஜனாதிபதியுடன் தொடர்பு இருப்பதான போர்வையில் மோசடியான முறையில் செயற்படும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.ஏம்.எஸ்.பி அத்தப்பத்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதியின் இணைப்பு செயலாளராக செயற்படுவதாக கூறி அதிமேதகு ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதான நபர் என்ற ரீதியில் மோசடியான முறையில் தோன்றி பல்வேறு வகையில் பொது மக்கள் மத்தியில் மோசடிகளை மேற்கொண்டும்,

பொது மக்கள் மீது பல்வேறு வகையில் சட்ட விரோத அழுத்தங்களை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்து வருவதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நபர்கள் தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகத்தினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வாறான முறையில் மோசடி அல்லது எவரேதும் சட்ட விரோத அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பார்களாயின் அல்லது யாரேனும் நபர் இவ்வாறான முறையில் மோசடிகளை மேற்கொள்வார்களாயின்

அந்த நபர் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கான கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்து இவ்வாறான மோசடி மற்றும் சட்ட விரோத அழுத்தங்களை தவிர்த்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாக பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – மேல் மாகாணம்
தேசபந்து திரு.தென்னக்கோண் – 071 8591 017

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – வட மாகாணம்
ரவி விஜேய குணவர்தன – 071 8591 009

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – மத்திய மாகாணம்
எஸ்.எம்.விக்கிரமசிங்க – 071 8591 001

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – தென்மாகாணம்/சப்ரகமுவ மாகாணம்
ரொஷான் பெர்னாண்டோ – 071 8591 028

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – வடமத்திய மாகாணம்/வடமேல் மாகாணம்.
நந்தன முணசிங்க – 071 8591 008

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஊவா மாகாணம்.
டபிள்யு.எவ்.யு.பெர்னாண்டோ – 071 8591 011

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – கிழக்கு மாகாணம்
லலித் பத்திநாயக்க – 071 8591 985

மேலும் கொழும்பு நகரத்திற்குள் இவ்வாறான மோசடிகளை எவராவது மேற்கொள்வார்களாயின் கீழ் கண்ட முகவரிக்கு அறிவிக்க முடியும்.

பணிப்பாளர் – கொழும்பு, மேசடி விசாரணைப் பிரிவு
பொலிஸ் அத்தியகட்சகர் – டபிள்யு.எல்.ஜே.ரசல் டி சொய்ஷா
தொலைபேசி இலக்கம் – 071 8591 736

இதேபோன்று நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் இவ்வாறான மோசடி இடம்பெறுமாயின் கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.
i. 119
ii. பொலிஸ் மா அதிபர்
கட்டளையிடும் தகவல் பிரிவு – அலுவலக அதிகாரி
தொலைபேசி இலக்கம் – 011 2854 885