போதைப் பொருட்களுடன் வவுனியாவில் இருவர் கைது..!

0

கப் ரக வாகனத்தில் பயணித்த இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(16.12.2019) மாலை 6 மணியளவில் ஹொரவப் பொத்தான வீதி, இலுப்பையடிப் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிசார் தாண்டிக்குளம் பகுதியில் இருந்து ஹொரவப் பொத்தானை வீதி வழியாக வந்த மகேந்திரா கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவரது உடமையில் இருந்து 560 மில்லி கிராம் மற்றும் 160 மில்லி கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஹெரோயின் பொதிகள் பொலிசாரால் மீ ட்கப்பட்டதுடன், மகேந்திரா ரக வாகனத்துடன் குறித்த இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஒருவர் ஹெரோயினை விற்பனை செய்பவர் எனவும், மற்றைய நபர் ஹெரோயினை வாங்கியவர் எனவும் தெரிய வந்துள்ளதாக போதைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இதன் போது 30 மற்றும் 33 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தாண்டிக்குளம் மற்றும் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களாவார்.

இந்த விசேட நடவடிக்கையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஞானசிறி, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான ஜகத், ஜயதிலக, பொலிஸ் கான்ஸ்டபிள்களான தினியகொட, சமன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.