வெள்ளை வான் கடத்தல்; சுவிஸ் தூதரக பெண்ணிற்கு 30 வரை விளக்க மறியல்..!

0

வெள்ளை வானில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொய்யான வாக்கு மூலங்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன் போது நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இக் கடத்தல் விவகாரத்தால் இலங்கைக்கும் – சுவிசிற்கும் இடையில் இராஜ தந்திர முரண்பாடுகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.