தமிழருக்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் வழங்க முடியாது – கோட்டா

0

இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலை வழங்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்ட வட்டமாக அறிவித்துள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசியர்களை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையின சிங்கள மக்கள் நிராகரிக்கின்ற ஒன்றை தம்மால் வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காணாமல் போனவர்கள் பற்றி இங்கு கருத்து வெளியிட்ட அவர், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதனால் அவர்களுக்கான சான்றிதழை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதுதான் சரியான வழி என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய, 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என்று சுட்டிக் காட்டிய அவர் இந்த திருத்தச் சட்டத்தை விரைவில் இரத்து செய்வதாகவும், மிகவும் பலவீனமான சட்டமான இதனை, அரசியலில் புலமை பெற்றோரும் அனுபவம் வாய்ந்தவர்களும் ஏன் கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.