வெள்ளை வான் ஊடக சந்திப்பால்; எனது வாக்கு 2 இலட்சத்தால் அதிகரித்தது.!

0

வெள்ளை வான் சாரதிகள் என கூறிக்கொண்டு இருவரை அழைத்து வந்து ராஜித சேனாரட்ன நடத்திய ஊடக சந்திப்பால் தனது வாக்கு இரண்டு இலட்சத்தால் அதிகரித்தாக ஜனாதிபதி கோதாபய ரஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடக பிரதானிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரட்ன என்பவர் அரசியல்வாதியே. அரசியலில் பொய் கூறுவது ஒரு அங்கமாக இருக்கின்றது. ஆனால் நான் அந்த கலாச்சாரத்திலிருந்து விலகியே இருக்கின்றேன்.

தற்போது மக்கள் அவ்வாறானவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவ்வாறாக செய்ததால் எனது வாக்கு இரண்டு இலட்சத்தால் அதிகரித்தது.

அவர் இன்னும் செய்திருரந்தால் அந்த வாக்கு இரண்டு மில்லியன் வரை அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.