கடத்தல் விவகாரம்; சிறை செல்லத் தயாராகும் ராஜித சேனாரத்ன..!

0

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்காக பெரும்பாலும், இந்த வார இறுதியில் ராஜித சேனாரத்ன விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒரு கதை என்ற முடிவுக்கு வந்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர், இந்த விவகாரத்துக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் தொடர்பு உள்ளதா எனக் கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரின் வாய்க்குள், கைத்துப்பாக்கி வைத்து அச்சுறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வெள்ளை வான் விவகாரத்திலும் ராஜித சிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.