அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் அபித் அலி..!

0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

tamilpori.com

அதன்பின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். சமநிலையில் முடிந்த இந்த டெஸ்டின் கடைசி நாளான இன்று அபித் அலி சதம் அடித்தார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியிலும், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை குறிதத்த பாக்கிஸ்தான் வீரர் பெற்றுள்ளார்.