வீண் விரயம் செய்யப்பட்ட சிறிதரன் எம்.பியின் கம்பெரலிய நிதி..!

0

கடந்த அரசாங்கத்தில் அரசுக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கம்பெரலியா நிதியானது தமிழர் பிரதேசத்தில் வீணடிக்கப்பட்டமை நாளாந்தம் ஆதாரங்களுடன் வெளிவந்த வண்ணம் உள்ளன

அந்தவகையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிதி மூலம் பல மில்லியன் ரூபா செலவழித்து அமைக்கபட்ட பூநகரி பஸ்நிலையமும்,சந்தை கட்டட தொகுதியும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட சபையில் அமைந்துள்ளதுடன் மகிந்த அரசாங்கத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என குறித்த பிரதேச சபை இவ் சந்தையை பயன்படுத்தாது கைவிட்டுள்ள நிலையில் தற்பொழுது குறித்த சந்தையானது கட்டக்காலி மாடுகள் படுக்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் பயன்படுகின்றது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் அதே இடத்தில் தனது கம்பெரலிய நிதியில் இரண்டு மில்லியன் செலவில் ஒரு சந்தையை உருவாக்கி சில தினங்களுக்கு முன்பு திறப்பு விழா செய்தார்.

மேலும் இவ் புதிய சந்தை அமைந்துள்ள பகுதியில் இந்து கோவில் மற்றும் பிரதேச செயலகம் மற்றும் போத்துகேயர் காலத்து கோட்டை என்பன அமைந்துள்ளதால் சந்தை அமைப்பதற்கு பொருத்தமான இடமில்லை எனவும் குறித்த புதிய சந்தை அமைந்துள்ள இடத்தில் கலாச்சார மண்டபம் மற்றும் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பொருத்தமான இடம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை பொருட்படுத்தாது குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் இவ் சந்தை அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் மக்களின் வரிப்பணம் இவ்வாறு தங்களது சுயலாப அரசியலுக்காக வீண் விரயம் செய்யப்படுவது தமக்கு கவலையளிப்பதாகவும் இவ் விடயம் தொடர்பில் புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.