கோட்டாவின் அதிரடி; பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை..!

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதிமன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையானின் விடுதலை தொடர்பில் அணுக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இத் தகவலை கோட்டா தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளது பிள்ளையான் உட்பட பிள்ளையானின் ஆதரவாளர்களிற்கு இந்த செய்தி பேரிடியான தகவல் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச் சாலைக்கு சென்ற அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துறை சந்திரகாந்தனை சந்தித்து நலன் விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாவின் இவ்வாறான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்த வடகிழக்கு தமிழ் மக்களும் கோடடடாவை ஆதரிக்கும் நிலை வரலாம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.