அடுத்த வருடம் முதல் பல்கலைக் கழகங்களுக்கு 83,000 பேர்..!

0

அடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக் கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது அமைச்சும் அரசாங்கமும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்த அமைச்சர் பல்கலைக் கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இளைஞர் யுவதிகளுக்கு விசேட இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.