இளைஞர்களுக்கு தொழில்திறன் குறைந்த (non skill) வேலைவாய்ப்புகளுடன் போதுநோக்கு அபிவிருத்தி பணிக்குழுவினை நிறுவ அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்த கல்வித் தகுதியுடைய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் 100,000 இளைஞர்களுக்கு தொழில்திறன் குறைந்த வேலைவாய்ப்புகளுடன் போதுநோக்கு அபிவிருத்தி பணிக்குழுவினை நிறுவ அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.