வன்பிளஸ் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில்..!

0

வன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து வன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ், வன்பிளஸ் டி.வி. என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் வன்பிளஸ் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் உருவாவது பற்றி தகவல் கிடைத்திருக்கும் நிலையில் இதன் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், புதிய இயர்பட்ஸ் எவ்வித கேபிளும் இன்றி உருவாக்கப்படும் என தெரிகிறது

தோற்றத்தில் வன்பிளஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்று காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வன்பிளஸ் இயர்பட்ஸ் புல்லட்ஸ் போன்ற பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2 நெக்பேண்ட் வடிவமைப்பு மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய இயர்பட்ஸ் பிரத்யேக வடிவமைப்பு, சிலிகான் இயர் டிப், மேம்பட்ட டியூனிங் மற்றும் தலைசிறந்த டிரைவர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதே போன்று பேட்டரி, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வன்பிளஸ் இயர்பட்ஸ் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப சந்தையில் பெரும்பாலான நிறுவனங்களும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில் வன்பிளஸ் நிறுவனமும் இணையலாம் என கூறப்படுகிறது