இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பாக்கிஸ்தானின் பிண்டி விளையாட்டரங்கில் மூன்றரை மணித்தியால தாமதத்தின் பின்னர் தொடர்ந்த மூன்றாம் நாள் ஆட்டம் 27 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.
வெளிச்சத்தை கணிக்கும் மாணியின் மூலம் போதிய வெளிச்சமில்லை என்பதை அறிந்து கொண்ட மத்தியஸ்தர்கள் பிற்பகல் 1.37 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.07 மணி) போட்டியை இடைநிறுத்தினர்.
போட்டி இடைநிறுத்தப்பட்ட போது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது தனஞ்சய டி சில்வா 91 ஓட்டங்களுடனும் டில்ருவன் பேரேரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் சுமார் மூன்றரை மணிநேர தாமதத்தின் பின்னர் பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) ஆரம்பமானது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்தது. தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களிலிருந்தும் டில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களிலிருந்தும் தங்களது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்தனர்.
5.2 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட இந்த ஆட்டநேரப் பகுதயில் இலங்கை அணி தனது மொத்த எண்ணிக்கைக்கு 19 ஓட்டங்களை சேர்த்தது.