இங்கிலாந்து தேர்தல்; மீண்டும் பிரதமராகும் பொறிஸ் ஜோன்சன்..!

0

இங்கிலாந்து பொதுத் தேர்தலில் 363 ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கொன்ச வேர்ட்டிவ் கட்சிக்கு 363 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பிரதமரின் கட்சிக்கு 368 ஆசனங்கள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இதுவரை தொழில்கட்சிக்கு 203 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்த வெற்றி பிரெக்சிட்டை சாத்தியமானதாக்குவதற்கான ஆணையை தனக்கு வழங்கும் என பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளது என தெரிவித்துள்ள தொழில் கட்சியின் தலைவர் எதிர் காலத்தில் தேர்தல்களில் தான் போட்டியிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.