மக்களிற்கு மகிழ்ச்சியான செய்தி கோதுமை மாவிற்கு வரி நிவாரணம்..!

0

கோதுமை மாவிற்கான வரி நிவாரணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில் கோதுமை மாவிற்கான இறக்குமதி விலையை சிறிய அளவில் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள அரிசி விலை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு ஓரளவிற்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த நிவாரணம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதன் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் அரிசிக்கு உள்ள போட்டித் தன்மை குறைப்பதாகும், இது தற்காலிகமான மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஆகும்.

இதேபோன்று தற்பொழுது கோதுமை மா இறக்குமதியில் நிலவும் ஏகபோக உரிமையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் பகிரங்க தன்மையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்