பெரும்பான்மை இனம் அனுமதிக்கும் தீர்வு தான் தமிழர்களுக்கு – மகிந்த

0

எங்களுடைய நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமில்லாத வகையில் பெரும்பான்மை இன மக்கள் விரும்புகின்ற, அவர்களின் அனுமதியுடனான தீர்வை மட்டுமே வழங்க முடியுமெனப் பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் பபிரதமர் மகிந்தவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல விடயங்களை வழங்க முடியாது.

ஒவ்வொரு நாடும் எங்களுக்கு அழுத்தங்களை, பரிந்துரைகளை வழங்கும். எனினும், எல்லாவற்றிற்கும் நாம் அடிபணிய முடியாது. எங்களுடைய செயற்பாடுகள் நாட்டின் நலன் கருதியதாகவே காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.