நாளை யாழ் விரைகின்றார் புதிய பாதுகாப்பு செயலர்..!

0

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, நாளை வியாழக் கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ் பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெறவுள்ள யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பிலான உயர் மட்டக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் கூறுகின்றன.

இக் கலந்துரையாடலுக்கு வடக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.