அத்துமீறிய பிரபல நடிகை ஸ்ரேயாவை கைது செய்த லண்டன் போலீசார்..!

0

நடிகை ஸ்ரேயா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். ஆனால், திருமணத்திற்கு பின் குறைவான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்போது அவர் சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார், இப்படம் மலையாள படமான My Boss படத்தின் ரீமேக் ஆகும். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஸ்ரேயா விளையாட்டுத்தனமாக செய்த காரியம் வில்லங்கமாக முடிந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் இருந்த உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தெரியாமல் அத்துமீறி நுழைந்துள்ளார் ஸ்ரேயா. இதனை கண்ட போலீசார் அவரை உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த படக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விவரத்தை கூறி அவரை காப்பாற்றியுள்ளனர்.