பிராந்திய விமான நிலையமாக யாழ் பலாலி அபிவிருத்தி செய்யப்படும்..!

0

யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவின் முழுமையான உதவி மற்றும் 300 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங்குடன் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையம் விரிவுப்படுத்தப்பட உள்ளதுடன் பயண பொதி பெல்ட்டும் நிர்மாணிக்கப்பட உள்ளது.

கடந்த அரசாங்கம் அவசரமாக இந்த விமான நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்து பிராந்திய விமான நிலையம் என திறந்து வைத்தாலும் விமான நிலையம் சரியாக இயங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பலாலி விமான நிலையத்தில் பொது விமான பயண கட்டுப்பாட்டு உபகரணங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் இல்லை என இந்திய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளிடம் அறிவிடப்படும் வரியை குறைக்க முடியுமா என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.