கிணற்றில் தவறி விழுந்து யாழில் சிறுமி பலி..!

0

யாழ் – இருபாலைப் பகுதியில் இன்றைய தினம் (11) கிணற்றில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயார் வேலை விடயமாக வெளியே சென்ற நிலையில் சித்தி முறையானவருடன் இருந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.