பொதுச் சந்தை நிதந்தர கட்டடம் வியாபாரிகளிடம் ஒப்படைப்பு..!

0

வவுனியா நகர சபையின் ஊடாக நீண்ட காலம் நிரந்தர கட்டிடம் இல்லாத சந்தை சுற்று வட்ட வீதியில் மரக்கரி வியாபாரிகளுக்கான நிரந்தர கட்டிடம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றும் நோக்குடன் நகர சபை எடுத்த முயற்சியின் பலனாக நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டது.

அத்துடன் நேற்றைய தினம் அதனை உத்தியோக பூர்வமாக நகர பிதா கெளரவ இராசலிங்கம் கெளதமன் தலைமையில் .உப நகர பிதா, நகரசபை செயலாளர் உத்தியோகத்தர்கள் ,கெளரவ நகர சபை உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன் வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டது.