சஜித்தை தோற்கடிக்க ரணில் மகிந்தவிடம் கோரிய சலுகைகள் இவைகள் தான்..!

0

தனது வரப்பிரசாதங்கள் மற்றும் வசதிகளுக்காக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கு இரண்டு தடவைகள் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு வெளியிடப்பட்ட தினமாகிய 2019.11.17 அன்று மாலையில் முதலாவது கடிதத்தையும், டிசம்பர் 02ஆம் திகதி இரண்டாவது கடிதத்தையும் முன்னாள் பிரதமர் ரணில் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் பிரதமரான தான் கௌரவமான முறையில் வாழ்வதற்காக குண்டுகள் துளைக்காத அதி நவீன மற்றும் சொகுசுவாய்ந்த கார், 08 பணியாளர்கள், 09 பொலிஸ் வாகனங்கள், அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று, விசேட மருத்துவ நிபுணர், அனுபவமிக்க தாதியர், உத்தியோகபூர்வ இல்லம், இலங்கை கடற்படையைச் சேர்ந்த சிறந்த 07 சமையல்காரர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் 200 பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலகம் மற்றும் நிரந்தர செயலாளர் என்பவற்றை ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமரிடம் கோரியுள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம் பெற்று இந்த வசதிகளை தனக்கு விரைவில் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முன்னாள் பிரதமர் ரணில் கோரியிருக்கின்றார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவிரைவில் அவற்றை வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த தனக்கு நெருங்கியவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது அற்ப சலுகைக்காகவும், தனது மேட்டுக் குடி கெளரவத்திற்காகவும் திட்டமிட்டு சஜித் பிறேமதாசவை தோற்கடித்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்பதுடன் எதிர்காலத்தில் ஐதேக தலையெடுகாத நிலையை மக்கள் சேவையின் ஊடாக தற்போதய ஜனாதிபதியும், பிரதமரும் சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.