முன்னணியால் வல்வெட்டித் துறையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..!

0

வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பின் 5 பேர் ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

எதிர்த்து வாக்களித்தவர்களுள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு பேரும், சுயேட்சை குழுவை சேர்ந்த நான்கு பேரும் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் எதிர்த்து வாக்களித்துள்ளார்.

இதில் ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பு உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்; இதனிடையே மொத்தமாக எட்டு பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே யாழ்.மாநகரசபை ,பருத்தித்துறை நகரசபைகளின் வரவு செலவு திட்டங்கள் முன்னணியுடன் ஈபிடிபி இணைந்து தோற்கடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.