ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் ஐ.நா செயலாளர் நாயக பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா செயலாளர் பதவிக்கு தெரிவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த தகவல்கள் உண்மையானது என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதய செயளாளர் நாயகம் அண்டோதோனியோ குட்டரேஸ்ஸின் நிறைவுக்கு பின்னர் அடுத்த ஐ.நா செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன போதும் தான் இதுபற்றி ஒன்றும் அறியவில்லையென கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் கரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரம சிங்க அவர்கள் உலகமே போற்றும் சர்வதேச ராஜதந்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது.