இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்..!

0

புதிய காபந்து அரசின் இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்வினால் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு –

 1. திரு.எஸ்.எச்.ஹரிச்சந்திர – நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சு
 2. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 3. திரு. எஸ்.சேனாநாயக்க – நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 4. திரு. எம்.சி.எல்.ரொட்ரிகோ – காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 5. திருமதி. எஸ்.எச்.ஏ.என்.டி.அபேரத்ன – பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 6. திரு.பீ.கே.எஸ்.ரவீந்திர – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
 7. திரு.டி.ஏ.டப்ளியு.வணிகசூரிய – புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு
 8. பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சு
 9. திருமதி.டி.எஸ்.விஜேசேகர – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி இராஜாங்க அபிவிருத்தி அமைச்சு
 10. திருமதி.எல்.டி.சேனாநாயக்க – சர்வதேச ஒத்துழைப்புகள் இராஜாங்க அமைச்சு
 11. செல்வி. ஆர்.எஸ்.எம்.வி.செனெவிரத்ன – சுதேச மருத்துவ சேவைகள் இராஜாங்க அமைச்சு
 12. திருமதி.ஏ.எஸ்.பத்மலதா – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு
 13. திரு.கே.எச்.டி.கே.சமரகோன் – மின்சக்தி இராஜாங்க அமைச்சு
 14. திரு.எம்.ஏ.பி.வீ.பண்டாரநாயக்க – இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு
 15. திரு.எம்.தேவசுரேந்திர – வலுச்சக்தி இராஜாங்க அமைச்சு
 16. திரு.எஸ்.ஜீ.விஜேபந்து – அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
 17. திரு.எஸ்.அருமைநாயகம் – முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 18. திரு.எம்.எஸ்.எஸ்.எஸ்.பெர்ணான்டோ – சுற்றுலா அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
 19. திரு.சி.எஸ்.லொக்குஹெட்டி – தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
 20. திருமதி.ஜீ.சி.கருணாரத்ன – மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
 21. திரு.ஏ.சேனாநாயக்க – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 22. திரு.எம்.ஐ.அமீர்- ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சு
 23. டி.டி.மாத்தற ஆரச்சி – அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் முன்மொழிவுகள் இராஜாங்க அமைச்சு
 24. திரு.,என்.பி.வீ.சி.பியதிலக்க – துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 25. செல்வி.ஈ.எம்.எம்.ஆர்.கே.ஏக்கநாயக்க – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
 26. செல்வி. கே.டப்ளியு.டீ.என்.அமரதுங்க – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
 27. செல்வி. ஏ.கே.டப்ளியு.எம்.என்.கே.வீரசேகர – வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சு
 28. திருமதி. ஏ.டி.சி.ரூபசிங்க – சுற்றாடல் இராஜாங்க அமைச்சு
 29. திரு.கே.ஏ.கே.ஆர்.தர்மபால – கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
 30. செல்வி. கே.ஜி.ஏ.அலவத்த – சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
 31. செல்வி.ஆர்.விஜயலெட்சுமி – சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
 32. திரு.அனுராத விஜேகோன் – தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

தகவல்:
மொஹான் கருணாரத்ன
பிரதி பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
09.12.2019