கோட்டாவின் தொடரும் அதிரடியால் திணறும் அரசியல்வாதிகள்..!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வந்து செல்லும் வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள் இனி சாதாரண பயணிகள் செல்லும் வழியில் சென்று வரவேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

அவ்வாறு அல்லாது அவர்கள் வி ஐ பி வாசலை பயன்படுத்த விரும்புவார்கள் எனில் தேவைப்படின் ஆயிரம் டொலரை செலுத்தி அதனூடாக செல்லலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வெளிநாட்டில் இருந்து வரும் முக்கிய அதிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் விமான நிலைய விசேட பிரமுகர்களுக்கு வாயிலில் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஏற்கனவே இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சாதாரண பிரமுகர்கள் பயன்படுத்தும் வாயிலூடாகவே சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.