வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களை உடன் மூடுமாறு உத்தரவு..!

0

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களூடாக டெங்கு காய்ச்சல் ஏற்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும், குழு வகுப்புக்களையும் உடன் நிறுத்ததுமாறு சுகாதார திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த 9 ஆம் மாதத்தில் இருந்து தற்போது வரை 35 மாணவர்கள் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 75 வீதமான மாணவர்களிற்கு தனியார் கல்வி நிலையங்களினாலேயே இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குருமன்காடு, வைரவபுளியங்குளம், தோணிக்கல் பகுதிகளில் இயங்கி வரும் 28 தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வி நிலைய நிர்வாகிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குருமன்காடு, வைரவபுளியங்குளம் பகுதிகளிலேயே அதிகமாக டெங்குவின் தாக்கம் இருப்பதன் காரணமாக இப்பகுதிக்குரிய கிராம சேவகருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.