ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு..!

0

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு இரண்டு புள்ளிகளால் (+2) அதிகரித்துள்ளது. Huff Post ஊடகத்துக்காக Yougov barometer நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி பிரெஞ்சு மக்களிடம் 29 வீத செல்வாக்குடன் மக்ரோன் உள்ளார். அத்துடன், பிரதமர் எத்துவார் பிலிப்பின் செல்வாக்கும் இரண்டு புள்ளிகளால் (+2) அதிகரிதுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் 1,037 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.