பரிசில் சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் மீட்பு..!

0

பிரான்ஸ் தலைநகர் பரிசில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் மத்தியில் மீட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பரிசில் உள்ள சுரங்க கண்காட்சி சாலையான Catacombs எலும்புக்கூடு கண்காட்சி சுரங்கத்துக்குள்ளேயே குறித்த இளம் பெண் சிக்கிக் கொண்டுள்ளார்.

காலை 9:30 மணிக்கு இளம் பெண் ஒருவர் தீயணைப்பு படையினரை அழைத்து, தமது தோழி சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

சில மீற்றர் ஆழத்தில் குறித்த இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் அவரை மீட்டுள்ளனர்.