அரசியலுக்கும், இலங்கைக்கும் ‘குட்பாய்’ கூறிய சந்திரிகா..!

0

குறித்த தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி கடும் முயற்சிகளைச் செய்திருந்த அதேவேளை, தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெற வைப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர், இன்னும் சில தினங்களில், இங்கிலாந்துக்குப் பயணமாகவுள்ளார் என்றும் அதற்கு முன்னர், இங்கிருக்கும் அவரது சொத்துகளை விற்பனை செய்வதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இ​தேவேளை, அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லையென்றும் அறிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடாது, இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள அமுனுகம, அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.