இலங்கை இளையோர் அணி மேற்கிந்திய தீவுகள் பயணம்..!

0

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தின் இளையோர் அணிகளுடன் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது.

இம்மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த முக்கோண ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் நேற்று (06) மேற்கிந்திய தீவுகள் பயணமாகியது.

நேற்று (06) இந்த முக்கோண தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (10) தமது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் இளையோர் கிரிக்கெட் அணியினை எதிர் கொள்கின்றது.

இந்த சுற்றுப் பயணத்திற்கான இலங்கை 19 இளம் கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர்ந்தும் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் நிப்புன் தனஞ்சய செயற்படவுள்ளார்.